தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கீழமைக்கேல்பட்டி பங்குத்தந்தை அடைக்கலசாமி நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடத்தி ஏசு கிறிஸ்து பிறப்பை அறிவித்தார். தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் அழகான குடில் அமைக்கப்பட்டிருந்தது. திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினர். கீழ அமைக்கல்பட்டி பங்குக்கு உட்பட்ட தா.பழூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், குறிச்சி அந்தோனியார் ஆலயம், மேல மைக்கேல் பட்டி சந்தன மாதா ஆலயம், மூர்த்தியான் தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நடுவலூர் புனித வளனார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் தன்ராஜ் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அப்போது கிறிஸ்து பிறப்பை அறிவித்தவுடன் வண்ணத்துப்பூச்சி சிறகுகளுடன் கூடிய தேவதை உடை அணிந்த குழந்தைகள் அணிவகுத்து நடந்து வர ஆலயத்தில் திரண்டிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடுவலூர் பங்குக்கு உட்பட்ட காரை காட்டாங்குறிச்சி, சுத்தமல்லி, சிங்கராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.


Next Story