ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

புதுக்கோட்டை

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்தனர். கடந்த 7-ந் தேதி புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்டதை உணர்த்தும் வகையில் ஏசுவின் சொரூபத்தை சிலுவையில் அறைந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏசு உயிர்த்தெழுதல் நிகழ்வு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதனையே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தங்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி திரளான கிறிஸ்தவர்கள்பங்கேற்றனர்.


Next Story