அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன


அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
x

ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரை வெளியிட்டு அமைச்சர் காந்தி பேசினார். அப்போது அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

சாதனை மலர்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற ராணிப்பேட்டை மாவட்ட ஈராண்டு சாதனை மலர் கையேடு வெளியீட்டு விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சாதனை மலர் கையேட்டை வெளியிட்டு 795 பயனாளிகளுக்கு ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட ரூ.4 கோடியே 50 லட்சத்து 73 ஆயிரத்து 527 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தகுதி அடிப்படையில்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்பதிட்டங்களை கொண்டு வந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகின்றார். இந்த இரண்டு ஆண்டு சாதனை 200 ஆண்டு சாதனை போன்றுள்ளது. தற்போதைய மக்களாட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலர்களும் இரவு பகல் பாராமல் மக்கள் நலனுக்காக செயல்படும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அரசுத் துறை அலுவலர்களை வழிநடத்திச் செல்கிறார். முன்பு மாதாந்திர ஓய்வூதியம் தகுதி பாராமல் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது யாருக்கு நலத்திட்டம் சென்று சேர வேண்டுமோ அவர்களை கண்டறிந்து தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது.

உடனுக்குடன்

மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஒன்றியக் குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story