நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஆவணி மாத 4-வது ஞாயிறையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல்லில் ஒரே கல்லினால் செதுக்குப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இங்கு தமிழ்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயா் கோவிலில் ஆவணி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை ேசர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகெண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படது. நாமக்கல் போலீசார் பாதுகாப்பு பணியை செய்தனர்.


Next Story