அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

ஆவணி அமாவாசை

பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன், எல்லையம்மன் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம்

மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், நன்செய் இடையாறு மூங்கில்வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

இதேபோல் நாமகிரிப்பேட்டை நகர பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், சித்தி விநாயகர் கோவில், முருகன் கோவில்களில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து அலங்காரம் செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சென்னை, கடலூர், திருச்சி மற்றும் வெளிமாவட்டங்கள் செல்லும் பக்தர்கள் ஆஞ்சநேயர் சாமிக்கு வடமாலை, துளசி மாலை அணிவித்து தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டியில் உள்ள சூடாமணி அம்மன், செவ்வந்திஸ்வரர் காமாட்சி அம்மன், காட்டூர் பொன்காளியம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story