சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புரட்டாசி மாத சதுர்தசியையொட்டி பரமத்திவேலூரில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடம் மற்றும் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில்களில் புரட்டாசி மாத சதுர்தசி விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி பரமத்திவேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், தேவாரம் திருவாசகம் ஓதலும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மஹா அபிஷேகமும், மதியம் மகேஸ்வர பூஜையுடன் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதேபோல் நன்செய் இடையாறு சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத சதுர்தசி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story