மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பத்திரகாளி அம்மன்

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், மற்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டுகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி அன்று மாலை பத்திரகாளி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை நடைபெறும்.

சாமி தரிசனம்

இந்நிலையில் நேற்று கார்த்திகை மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். மதியம் நடைபெறும் உச்சிகாலை பூஜை மிகவும் சிறப்பானதாகும். அப்போது அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

நேற்றும் உச்சிகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

அப்போது சில பக்தர்கள் அருள்வந்து சாமி ஆடினார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.


Next Story