கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

மார்கழி மாத பிறப்பையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிருஷ்ணகிரி

மார்கழி மாத பிறப்பையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

மார்கழி மாத பிறப்பு

மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து சாமிக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கவீஸ்வரர் கோவில்

அதேபோல கிருஷ்ணன் கோவில் தெரு நவநீத வேணுகோபால சாமி கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், பழையபேட்டை கவீஸ்வரர் கோவில், லட்சுமி நாராயணசாமி கோவில் உள்பட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல பெண்களும் வீடுகளில் காலையிலேயே கோலமிட்டு வழிபட்டனர்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story