கோவில்களில் சிறப்பு பூஜை
மகா சிவராத்திரியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகா சிவாராத்திரியையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.
நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
கெலமங்கலம் அருகே உள்ள பேவநத்தம் வனப்பகுதியில் மலை மீதுள்ள சிவா நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி கணபதி ஹோமம், சாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கணபதி ஹோமம், ருத்ராபிேஷகம் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமிக்கு அலங்காரம் செய்து அக்கினி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சிநடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
சிறப்பு பூஜை
இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரர் கோவில், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், திம்மாபுரம் அங்காளம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.