காலபைரவருக்கு சிறப்பு பூஜை


காலபைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி இங்குள்ள காலபைரவருக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு வடை மாலை, எலுமிச்சை மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story