பிரான்மலை தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
குரு பெயர்ச்சியையொட்டி பிரான்மலை தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே பிரான் மலையில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் குன்றக்குடி தேவஸ்தானம் 5 கோவில் வகை திருகொடுங்கொண்டநாதர் கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. கோவில் தலைமை சிவாச்சாரியார் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வடைமாலை சாற்றப்பட்டு தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பிரான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்தானம் செய்திருந்தது.
Related Tags :
Next Story