தலைவாசல் அருகே மழைவேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜைசாம்பிராணி புகையால் தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம்


தலைவாசல் அருகே மழைவேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜைசாம்பிராணி புகையால் தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம்
x
சேலம்

தலைவாசல்

தலைவாசல் அருகே மழைவேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது சாம்பிராணி புகையால் தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம் அடைந்தனர்.

மழை வேண்டி பூஜை

தலைவாசல் அருகே புத்தூர் கிராம மக்கள் மழை வேண்டி சிறுவாச்சூர் ஊராட்சி சாலையம்மன் நகரில் உள்ள தேவேந்திரன் மற்றும் தேன்பாடி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனீக்கள் கொட்டியது

முன்னதாக கல்வராயன் மலை அடிவாரத்தில் தேன்பாடி அருவி அருகில் கிராம மக்கள் திரண்டு சென்று வழிபபாடு நடத்தினர். அப்போது ஊதுவர்த்தி மற்றும்,சாம்பிராணி புகை பரவியது.

இதனால் மரங்களில் இருந்த தேனீக்கள் பறந்து வந்து பக்தர்களை கொட்டியது. புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, சங்கர், சித்ரா, ஆறுமுகம், லட்சுமி உள்பட 26 பேர் காயம் அடைந்தனர்.. அவர்கள் அனைவருக்கும் சிறுவாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story