கோவில்களில் சிறப்பு பூஜை


கோவில்களில் சிறப்பு பூஜை
x

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

ஆவணி பவுர்ணமி

புதுச்சத்திரம் அடுத்த எஸ்.நாட்டாமங்கலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலுமிச்சை பழங்களை கொண்டு எலுமிச்சை அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏகாம்பரநாதர்

இதேபோல் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் சிவன் கோவில்களில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது.

வேலூர் மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி அங்காளம்மன், பேட்டை பகவதியம்மன், புதுமாரியம்மன், கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன், பொத்தனூர் பகவதியம்மன் உள்ளிட்ட அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதேபோல் வேலூர் எல்லையம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பாண்டமங்கலம் மற்றும் வேலூர் காசி விஸ்வநாதர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர் உள்ளிட்ட கோயவில்களில் பவுா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story