ஆனந்த கல்யாண நடராஜருக்கு சிறப்பு பூஜை
நெல்லிக்குப்பம் பூலோகநாதர்கோவிலில் ஆனந்த கல்யாண நடராஜருக்கு சிறப்பு பூஜை
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் 6 முறை ஸ்ரீ ஆனந்த கல்யாண நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆனந்த கல்யாண நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு புவனாம்பிகை சமேத பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ஆனந்த கல்யாண நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், தயிர், தேன், விபூதி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 27 வகையான நறுமண பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.