ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
x

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயருக்கு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story