அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டு கோமுகி ஆற்றங்கரையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு முதற்கால பூஜையும், மதியம் 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், அங்காள பரமேஸ்வரி அம்மன் மீது மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வெண்பொங்கல், சர்க்கரை வைத்து 10 கிலோ கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஆற்றங்கரையில் ஏராளமான பெண்கள், தங்களது இஷ்ட தெய்வத்தை நினைத்து மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, வளையல் வைத்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story