சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை


சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை
x

சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

சஷ்டியையொட்டி கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள விஷ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story