பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்


பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
x
தினத்தந்தி 14 Feb 2023 7:00 PM GMT (Updated: 14 Feb 2023 7:00 PM GMT)

மகா சிவராத்திரியையொட்டி அன்றைய தினம் இரவு முழுவதும் பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திண்டுக்கல்

மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி, மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


Related Tags :
Next Story