வெட்டிங்காடு சுயம்பு பழனியம்மனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள்


வெட்டிங்காடு சுயம்பு பழனியம்மனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள்
x

சோளிங்கர் அருகே வெட்டிங்காடு சுயம்பு பழனியம்மனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் அருகே வெட்டிங்காடு சுயம்பு பழனியம்மனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன.

சோளிங்கரை அடுத்த வெட்டிங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு அம்மனாக தோன்றிய பழனியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி 3-வது வெள்ளினக்கிழமைைய முன்னிட்டு தாமரைக் குளம், தாமரைக் குளம் புதூர், குட்டைகீர் ஊர், வெங்கடாபுரம் ஆகிய கிராம மக்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

மேலும் பெண்கள் மாவு விளக்கு செலுத்தியும் வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் பழனியம்மன் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகளான வேலாயுதம், கிருஷ்ணா லேப் திருமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story