அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கம்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ந் தேதி வரை நான்கு நாட்களுக்கு அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு 10.40 மணிக்கு சென்றடையும், திருத்தணியில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு 11 மணிக்கு வந்தடையும். மதியம் 2.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு மாலை 3.40 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story