9 இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்


9 இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகராட்சியில் இன்று 9 இடங்களில் சிறப்பு வரிவசூல் முகாம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியில் வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவையை பொதுமக்கள் எளிதில் வரிசெலுத்த ஏதுவாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. அதாவது வழுதரெட்டி காலனி சமுதாய நலக்கூடம், வி.மருதூர் தாகூர் பள்ளி, பானாம்பட்டுபாட்டை எஸ்.ஏ.டி. தியேட்டர் அருகில், திருச்சி மெயின்ரோடு சோலை மகால் திருமண மண்டபம் அருகில், சாலாமேடு தில்லை காளி கோவில், கீழ்பெரும்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நீர்த்தேக்க தொட்டி அருகில், கம்பன் நகர் மெயின்ரோடு, புதிய மற்றும் பழைய நகராட்சி அலுவலக கட்டிடங்கள் ஆகிய இடங்களில் வரிவசூல் முகாம் நடைபெறுகிறது. மேலும் நிலுவைதாரர்கள் வரி செலுத்த ஏதுவாக இணையதள முகவரியான http://tnurbanepay.tn.go.in மூலமாகவும், விழுப்புரம் நகராட்சியை தேர்வு செய்து தாங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் வரி, கடை வாடகை, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் வரியை நிலுவையின்றி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள், வரிகளை நிலுவையின்றி செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், வரி செலுத்தி நகராட்சியின் வளர்ச்சி பணியில் பங்கெடுக்குமாறும் வரி செலுத்துவோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.


Next Story