பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்


பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
x

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் ராமநாராயண பெருமாள் கோவிலில் உள்ள சீதாதேவி, லட்சுமணர் சமேத ராம நாராயண பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாராயண பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். பெருமாளுக்கு மங்கல ஆரத்தி உள்ளிட்ட உபச்சாரங்கள் நடைபெற்றன.

அதுபோல் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார். பெருமாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க மங்கல ஆரத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது.


Next Story