கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்


கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக  தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பொங்கல் பண்டிகை

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளில் தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கோனர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதன் காரணமாக நெல்லை, நாகர்கோவில், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். மேலும் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தாம்பரத்துக்கும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

இருமடங்கு கட்டணம்

தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கோவை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். தென் மாவட்டத்தில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக தினமும் திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பொள்ளாச்சியில் பெரும்பாலும் நிரம்பி வருகிறது. போதிய பஸ் வசதி இல்லாததால் கிணத்துக்கடவு, போத்தனூர் சுற்று உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய உள்ளது. மேலும் தனியார் பஸ்களும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விடுகின்றனர்.

சிறப்பு ரெயில்

இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் வசிக்கும் பொள்ளாச்சி, கோவை மக்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தாம்பரத்துக்கு ரெயில் இயக்க வேண்டும். கூடுதலாக ரெயிலை இயக்குவதற்கு கோவை ரெயில் நிலையத்தில் இடவசதி இல்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே போத்தனூரில் ரெயில் நிலையத்தில் போதிய வசதிகள் இருப்பதால் அங்கிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story