தஞ்சையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரெயில்
தஞ்சையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
பழனியில் பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் தஞ்சை மற்றும் பழனி இடையே இயக்கப்படுகிறது. வண்டி எண் 06117 தஞ்சை -பழனி சிறப்பு ரெயில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 9.20 மணிக்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு 10.25 மணிக்கு வருகிறது. பின்னர் 10.30 மணிக்கு புறப்பட்டு பகல் 1.30 மணிக்கு பழனியை சென்றடையும். இந்த ரெயில் பூதலூர், திருவெறும்பூர், மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். மேலும், மேற்கண்ட நாட்களில் இதேரெயில் (வண்டி எண் 06415) மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பயணிகள் மயிலாடுதுறையில் இருந்து பழனிக்கு செல்ல நேரடி பயணச்சீட்டு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06118 பழனி-தஞ்சை இடையேயான சிறப்பு ரெயில் இன்று, நாளை ஆகிய நாட்களில் பழனியில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.18 மணிக்கு திருச்சி ஜங்ஷன்ரெயில் நிலையம் வந்து சேரும். பின்னர் இங்கு இருந்து 5.25 மணிக்கு புறப்பட்டு 6.15 மணிக்கு தஞ்சையை சென்றடையும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.