திருச்சியில் இருந்து திருவாரூருக்கு இன்று சிறப்பு ரெயில்
திருச்சியில் இருந்து திருவாரூருக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருச்சி
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் சார்பில் விழுப்புரம் மற்றும் திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வண்டி எண் 06131 திருச்சியில் இருந்து திருவாரூருக்கு இன்று (சனிக்கிழமை) காலை 9.20 மணிக்கு புறப்படும். ரெயில் பொன்மலை, மஞ்சத்திடல் திருவெறும்பூர், சோழகம்பட்டி, பூதலூர், ஆலக்குடி, தஞ்சை, சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குலிகரை வழியாக திருவாரூருக்கு காலை 11.40 மணிக்கு வந்து சேருகிறது. மறுமார்க்கமாக மாலை 3.40 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.05 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது.
Related Tags :
Next Story