தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு தாம்பரம் நோக்கி செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) டிசம்பர் 3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு நாகர்கோவில் நோக்கி செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06011) டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் புறப்பட்டு அதேநாள் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இதேபோல, நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06030) டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு நெல்லை நோக்கி வரும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06029) டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story