தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
திருச்சி
தஞ்சையில் இருந்து திருச்சிக்கு (வண்டி எண்: 06871) இன்று (சனிக்கிழமை) முதல் தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. (வண்டி எண்: 06891-06892) திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலத்திற்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும் வகையில் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மேலும் மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடிக்கு (வண்டி எண்: 06403) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு மன்னார்குடிக்கு சென்றடையும்.
Related Tags :
Next Story






