கோவையில் மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்


கோவையில் மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் மாநகர போலீசாருக்கு வருடாந்திர சிறப்பு பயிற்சிகள் பி.ஆர்.எஸ். மைதானத்தில் அளிக்கப்படுகிறது.

போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு 2023-ம் ஆண்டிற்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சிகள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆயுதப்படை துணை கமிஷனர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதில், வருடாந்திர பயிற்சியாக ஆயுதபடை போலீசாருக்கு அணிவகுப்பு, உடற்பயிற்சி, யோகா, துப்பாக்கி சுடுதல், பொதுமக்களிடத்தில் அணுகுமுறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிகளை கையாளுவது

இந்த பயிற்சி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். இதில், மொத்தம் 550 மாநகர போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. முதல் நாளான நேற்று ஆயுதபடை போலீசாருக்கு துப்பாக்கிகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த தகவலை மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story