ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சூரமங்கலம்:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளனா.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ெரயில்வே நிர்வாகம் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கீழ் கண்ட ெரயில்களை இயக்குகிறது. அதன்படி தாம்பரம்- மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06049) நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 9.27 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்,
இதேபோல் மறு மார்க்கத்தில் மங்களூரு சென்ட்ரல்- தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06050) வருகிற 27-ந் தேதி மற்றும் செப்டம்பர் 3-ந் தேதி மங்களூரு சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.02 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்,
பெங்களூரு- கொச்சுவேலி
மேலும் பெங்களூரு- கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06565) பெங்களூருவில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி வழியாக இரவு 7.55 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி- பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06566) கொச்சுவேலியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11 மணிக்கு பெங்களுரு சென்றடையும்,
செகந்திராபாத்- கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07119) செகந்திராபாத்தில் இருந்து நாளை மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 11.38 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 11.40 மணிக்கு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்,
கொல்லம்- செகந்திராபாத்
இதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்- செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07120) கொல்லத்தில் இருந்து வருகிற 27-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.