சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
ஓட்டப்பிடாரம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகேவடக்கு கைலாசபுரம் மற்றும் தெற்கு கைலாசபுரம் கிராமங்களில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு உதவி இயக்குனர் விஜயஸ்ரீ தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், சேயற்கை முறையில் கருவூட்டல், குடல் புண் நீக்குதல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், சுண்டுவாதம் அறுவை சிகிச்சை உட்பட பல சிகிச்சைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறந்த கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பசுவந்தனை கால்நடை உதவி மருத்துவர் அலுவலர் செல்வி, கால்நடை உதவியாளர் ராமலட்சுமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.
Related Tags :
Next Story