வெள்ளிவாடியில் சிறப்பு கால்நடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்


வெள்ளிவாடியில் சிறப்பு கால்நடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்
x

வெள்ளிவாடியில் சிறப்பு கால்நடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி

மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிவாடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணபதி பிரசாத் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமை இனாம்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளையம்மாள் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். முகாமிற்கு திருச்சி மண்டல இணை இயக்குனர் எஸ்தர்ஷீலா தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், அம்மை நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்டனர். மேலும் சினை பிடிக்காத கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு மேலாண்மைக்காக சிறந்த 3 கன்றுகளுக்கும், மூன்று கால்நடை வளர்ப்போருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story