முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
x

வாலாஜா டோல்கேட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

வாலாஜா டோல்கேட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் அரசின் சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க..ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், வாலாஜா டோல்கேட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி தலைமையில் பட்டாசு வெடித்து, கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் அர்.காந்தி பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புத்தகம் கொடுத்து வரவேற்றார். அப்போது கனிமவளம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மற்றும் அரசு அதிகாரிகள், மற்றும் திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கலைநிகழ்ச்சி

அதைத்தொடர்ந்து சிறிது நேரம் கலைநிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார். பின்னர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். இதையடுத்து அவர் திருப்பத்தூர் புறப்பட்டு சென்றார்.

இன்று (புதன்கிழமை) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் இரவு ராணிப்பேட்டை ஜி.கே.ரெசிடென்சியில் தங்குகிறார்.

கலெக்டர் அலுவலகம்

நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பின்னர் காலை 11 மணி அளவில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பிஞ்சி ஏரி சீரமைக்கும் பணியை பார்வையிடுகிறார். இதையடுத்து அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.


Related Tags :
Next Story