முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
ஆம்பூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திறந்துவைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட எல்லை மாதனூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு முதல்-அமைச்சரை வரவேற்றார். இதைத்தொடர்ந்து ஆம்பூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன், நல்லதம்பி, ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் நகர மன்றத் தலைவர் ஏஜாஸ் அஹமத் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.