மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகத்திற்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகத்திற்கு விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம்,
சி.வி.சண்முகம் எம்.பி.க்கு வரவேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இவர் இன்று திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வருகை தந்தார். அவருக்கு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை, மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் ஆகிய இடங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பை பெற்ற சி.வி.சண்முகம் எம்.பி., மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கும் மற்றும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலந்துகொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், விழுப்புரம் நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, கண்ணன், ராஜா, சேகரன், விஜயன், நடராஜன், பன்னீர், முகுந்தன், கோவிந்தசாமி, புண்ணியமூர்த்தி, விநாயகமூர்த்தி, விழுப்புரம் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிரஸ் குமரன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் பாஸ்கர், மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், வக்கீல் அணி செயலாளர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர்கள் முருகவேல், பூர்ணராவ், சங்கர், வெங்கடேசன், கனகராஜ், ஒன்றிய துணை செயலாளர் நேமூர் குமார், மேலவை பிரதிநிதி தென்னவராயன்பட்டு குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.