முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
x

வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சர் தஞ்ைச மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு 8.30 மணிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சிறப்பான வரவேற்பு

இதைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் மரியசார்லஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா உள்பட தி.மு.க.வினர் மேள,தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.


Next Story