அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆனைமலை
கோவை மாவட்டம் ஆனைமலை உப்பாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. சயன நிலையில் இருக்கும் இந்த அம்மனை தரிசனம் செய்ய கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோவிலில் அமாவாசை மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதன்படி ேநற்று அமாவாசைையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன்படி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், ஆனைமலை உப்பாற்று மற்றும் ஆழியாறு ஆற்றிலும் நீராடிய பக்தர்கள் முதல் கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகையைெயாட்டி நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலை போலீசார் மற்றும் ஊர் காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






