ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

அமாவாசை வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆடி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ஆடி மாத அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

வே.முத்தம்பட்டி

தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆடி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


Next Story