ஏகாதசியையொட்டி காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ஏகாதசியையொட்டி காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
கோயம்புத்தூர்
காரமடை
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பக்ஷ ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலையில் மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், கால சந்தி பூஜையை தொடர்ந்து விஷ்வக்ஷேனர் ஆராதனம், புண்யாவதனம், கலசவாகனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் முடிந்து அரங்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் வெண்பட்டு குடை சூழ மேலதாளம் முழங்க கோவில் பிரகாரத்தில் வளம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, சாற்று மறை வைபவம் நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story