பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் யெ்தனர்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் யெ்தனர்.

சிறப்பு வழிபாடு

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சிம்மவாகன காலசம்ஹார பைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக பைரவருக்கு திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகாள சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடு் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தகட்டூர் பைரவர் கோவில்

நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் உள்ள பைரவர்கள், அஷ்ட பைரவர், தகட்டூரில் பைரவர் கோவில், உள்ளிட்ட பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story