காத்தாயிஅம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


காத்தாயிஅம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

பங்குனி மாத பிறப்பையொட்டி காத்தாயிஅம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே சித்தாடி காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத பிறப்பையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் காத்தாயிஅம்மன், பச்சைவாழி அம்மன், வாழ்முனீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் வினோத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story