குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது

தேனி

சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி இன்று ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே மாலை 3 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story