நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு


நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 19 Jun 2023 1:00 AM IST (Updated: 19 Jun 2023 11:52 AM IST)
t-max-icont-min-icon

நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலையில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் உகப்படிப்பு நடந்தது. மதியம் 12 மணியளவில் சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் தேங்காய், வெற்றிலை, பாக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன் உச்சிப்படிப்பு நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு சட்டம் சொல்லுதல், 1.30 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட அய்யாவழி பக்தர்கள் இணைந்து செய்து இருந்தனர்.


Next Story