நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதா, லட்சுமணன், சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story