பொள்ளாச்சி, ஆனைமலையில் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


பொள்ளாச்சி, ஆனைமலையில் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

பொள்ளாச்சி, ஆனைமலையில் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பெரிய கடை வீதியில் மிக பழமையான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஓணம் பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதோடு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பெருமாளுக்கு துளசி மாலை, ரோஜா பூ மாலை உள்ளிட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு திவ்ய திருமஞ்சனம் நடந்தது. காலை 10.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. மேலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.


Next Story