பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ரேவதி நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிறப்பு அலங்காரம்

இதேபோல் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், கோபுரப்பட்டி ஆதிநாயகபெருமாள் கோவில், அழகியமணவாளம் சுந்தரராஜ பெருமாள் கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், முசிறி அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா கோவில், பிரமாண மடத்தில் உள்ள ஆஞ்சநேயர், புள்ளம்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், திண்ணகுளம், ஊட்டத்தூர், ரெட்டிமாங்குடி, சிறுகளப்பூர், எம்.கண்ணனூர், நெய்குளம், இ.வெள்ளனூர், ராமநாதபுரம், ஆலம்பாக்கம், கோவாண்டகுறிச்சி, விரகாலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது.மேலும் தா.பேட்டை அருகே நீலியாம்பட்டியில் தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள், அடிவாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், தா.பேட்டையில் வேணுகோபாலசுவாமி, பிள்ளாபாளையத்தில் நரசிங்க பெருமாள், உத்தண்டம்பட்டியில் கலியுக ராஜகோபால் சுவாமி, லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story