பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி மாதத்தையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம் ஆகும். வழிபாடுகளையும், விரதங்களையும் மேற்கொள்ள உகந்தது. இந்த மாதம் முழுவதும் அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், 108 திவ்ய தேசங்களிலும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி புரட்டாசி மாதம் நேற்று தொடங்கியது. புரட்டாசி மாத முதல் நாளில் தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோக நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய் உடைத்து, துளசிமாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபாடு செய்தனர்.

பெருமாள் கோவில்கள்

இதேபோல நீலமேகப்பெருமாள், நரசிம்மபெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன்தெரு ஜனார்த்தன பெருமாள், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்கிரகாரம் கோதண்டராம பெருமாள், மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story