பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலை:
சீனிவாச ெபருமாள் கோவில்
விராலிமலை தாலுகா விராலூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமயம்
திருமயத்தில் பழமை வாய்ந்த குடவரை கோவிலான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைெபற்றது. முன்னதாக சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
மணமேல்குடி அருகே பொன்னகரம் பொத்தையன்குடியிருப்பில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. சின்னதிருப்பதி என்றழைக்கப்படும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விழா மண்டகப்படிதாரர்களின் சிறப்பு பூஜையுடன் 10 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையைமுன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.