பொள்ளாச்சி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி காலையில் ஸ்ரீமன் நாராயணசாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை மற்றும் உகப்படிப்பு நடந்தது.
காலை 12 மணியளவில் சுவாமிக்கு வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் தேங்காய்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன், உச்சிப்படிப்பு நடைபெற்றது. அதன்பின்னர் 1 மணிக்கு சட்டம் சொல்லுதல், 1.30 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.