சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தை கிருத்திகையை முன்னிட்டு சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
தை கிருத்திகையை முன்னிட்டு சங்கராபுரம் சன்னதிதெரு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பாலசுப்பிரமணியருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தேவபாண்டலம் குந்தவேல் முருகன், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான், சங்கராபுரம் பூட்டை சாலை முருகன், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story