ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு


ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 May 2023 10:00 AM IST (Updated: 22 May 2023 10:01 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதன்படி, காலையில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

மதியம் 12 மணியளவில் சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, வாழை, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் தேங்காய், இளநீர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன், உச்சிப்படிப்பு நடைபெற்றது. அதன் பின்னர் 1 மணிக்கு சட்டம் சொல்லுதல், 1.30 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் அய்யாவழி பக்தர்கள் இணைந்துசெய்து இருந்தனர்.


Next Story